குழந்தைகளின் மனதில் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி என்று குறிப்பிட்ட ஒரு சில துறைகள் சார்ந்த கனவுகளை விதைக்கிறோம்.
ஆனால் பெரும்பாலும் அவர்கள் எதிர்காலத்தில் அதனையும் கடந்த ஏதோ ஒரு பணியில்தான் ஈடுபடுகிறார்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுக்கே உண்டான தனிப்பட்ட கனவுகளையும், பொழுதுபோக்குகளையுமே எதிர்காலமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் வெற்றி கண்டு வருகிறார்கள்.
ஒவியம் வரைய வேண்டும் என்று நினைத்த பலர் அவர்கள் தங்கள் ஆசைகளுக்கு தொடர்பில்லாத ஒரு பணியில் வேலை பார்த்து வருவார்கள். விளையாட்டே எதிர்காலம் என்று நினைத்தவர்கள், சூழ்நிலைகளால் விளையாட்டையே மறந்துவிட்டிருப்பார்கள். ஆனால் நிகழ்காலம் அனைவருக்குமான வாய்ப்புகளை திறந்துவிட்டிருக்கிறது. தாங்கள் நினைத்தவற்றை சாதிப்பதற்கான வழிகள் முன்பை விட எளிதாகக் கண்டுகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
பொழுதுபோக்கு துறைகளாக இருந்தாலும் அத்துறையில் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவும், பொருளாதாரத்தை பெருக்கக்கூடிய வணிக அறிவும் தேவைப்படுகிறது. அதனை அளிக்கும் வகையில் பயிற்சிக்கூடங்கள் அல்லது துறை சார்ந்த வல்லுநர்களிடம் நேரடி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தங்கள் எண்ணங்களை நிகழ்வுகளாக்கி சாதனைகள் புரியலாம்.
பொழுதுபோக்குகளை வணிகமாக்க வாய்ப்பளிக்கும் சில துறைகள்
புகைப்படக்கலை
நாடகம்
பங்குச்சந்தை வணிகம்
செயலாற்றும் இயந்திரங்கள் (ரோபோட்டிக்ஸ்)
அசைவூட்டம் (அனிமேஷன்)
இசை
உடற்பயிற்சி
விளையாட்டு
அழகுக்கலை
நாடகம்
பங்குச்சந்தை வணிகம்
செயலாற்றும் இயந்திரங்கள் (ரோபோட்டிக்ஸ்)
அசைவூட்டம் (அனிமேஷன்)
இசை
உடற்பயிற்சி
விளையாட்டு
அழகுக்கலை
- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24700&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக